தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சியில் பதவி கிடைக்காத ஆத்திரம்; அதிமுக கூட்டத்தில் ரகளை

திருச்சியில் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அதிமுக கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையால் பரபரப்பானது. 

News image
திருச்சியில் பதவி கிடைக்காத ஆத்திரம்; அதிமுக கூட்டத்தில் ரகளை
Updated On :13 செப்டம்பர் 2020, 9:12 am

DIN

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. அப்போது மண்டபத்திற்குள் மஞ்சள் நிறக்கொடியுடன் புகுந்த 30 பேர் திடீரென மேடையை நோக்கி சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த சேர்களை எடுத்து அடிக்க ஆரம்பித்தனர்.

இதனால் கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்தனர். அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி வந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் தகராறு செய்தவர்கள் வெளியேறிய பின்னர் கூட்டம் நடந்தது.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள்  கூறியதாவது: 

அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் பதவியை மீனவர் அணிச் செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகராறு செய்தனர். மேலும், முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி மற்றும் சுந்தரராஜன்  ஆகியோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.