கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம், சிபிஐ கட்சிகள்.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம், சிபிஐ கட்சிகள்.


கிருஷ்ணகிரி: மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கட்சியின் வட்டச் செயலாளர் டி. ராஜா, சிபிஐ கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி சிவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ் ஜெயராமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், சிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எஸ் கண்ணன் மாவட்ட குழு உறுப்பினர் சங்கர், சுபத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com