தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செங்கோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :19 செப்டம்பர் 2020, 7:23 am

DIN


திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது.  நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்தி வழங்க வேண்டும். கிசான் திட்டத்தில் மோசடி  செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நிவாரண நிதி ரூ 7,500 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் சிபிஐ நகர செயலாளர். செல்வராஜ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராயப்பன் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர். எஸ்.மணிவேல் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.