தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,624 குறைந்தது!

தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ. 1,624 குறைந்துள்ளது.  வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 குறைந்து, ரூ.38,040-க்கு விற்பனை ஆகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ. 1,624 குறைந்துள்ளது. 

வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 குறைந்து, ரூ.38,040-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 65 குறைந்து, ரூ. 4,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ. 2.70 குறைந்து ரூ. 60.60-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 60,600-க்கு விற்பனை ஆகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. கிராமுக்கு ரூ.5,385-க்கு (சவரனுக்கு ரூ. 43,080) விற்பனை ஆனது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று விலை கணிசமாக குறைந்துள்ளது. அதிலும் கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,624 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,755

1 பவுன் தங்கம்............................... 38,040

1 கிராம் வெள்ளி.............................60.60

1 கிலோ வெள்ளி............................. 60,600

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,820

1 பவுன் தங்கம்...............................38.560

1 கிராம் வெள்ளி.............................63.30

1 கிலோ வெள்ளி.............................63,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com