கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் 1.6% ஆக இருந்த கரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக குறைந்துள்ளது. இதனை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே தமிழக அரசின் குறிக்கோள்.
தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90.2% ஆக உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. தமிழகத்தில் கரோனா பரிசோதனையில் தொற்று விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது
பரிசோதனை செய்யப்படுவோரில் 6.4%பேருக்கு தான் கரோனா தொற்று உள்ளது எந்த மாவட்டத்திலும் கரோனா தொற்று விகிதம் 10%-க்கு மேல் அதிகரிக்காமல் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை 5% க்கும் குறைவாக கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...