தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாமக்கலில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாகும் மூன்று வேளாண் மசோதாக்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழம

News image
எருமப்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.
Updated On :25 செப்டம்பர் 2020, 9:19 am

DIN

நாமக்கல்: விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாகும் மூன்று வேளாண் மசோதாக்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  

மாவட்ட  அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எருமப்பட்டி கடைவீதியில் பேருந்துகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நாமக்கல் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். 

மறியல் போராட்டத்தில் சதாசிவம், மாலா , ராமசாமி, சுப்பன், பூபாலன் கருப்பண்ணன், சிவச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோல் மாவட்டம் முழுவதும் நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. எருமப்பட்டியில் ஒரு பெண் உட்பட 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

அவர்களை எரும்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உள்ள ஜே.கே.பி திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.