8. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி இருக்கும் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், இதய தெய்வம் அம்மாவின் அரசுக்கும் நன்றியும், பாராட்டும் !
9. தமிழ் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் முதற்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றில் புதிதாக 1,400 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களை உருவாக்கியும், இப்பொழுது 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தும், அடுத்துவரும் ஆண்டுகளில் புதிதாக 1650 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் உருவாகவும் வகை செய்திருக்கும் கழக அரசுக்கு நன்றியும், பாராட்டும்! மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்தமைக்குப் பாராட்டும், நன்றியும்!