ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரத்தில் மருத்துவ சேவைக்கு இலவச பேருந்து வசதி

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அமைந்துள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு பேருந்து நிலையத்திலிருந்து சென்று மருத்துவம் பார்த்து திரும்பும் வகையில் இலவச பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.  

News image

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இலவச பேருந்து வசதி சேவையை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா மற்றும் சங்கரா மருத்துவமனையின் தலைவர் பம்மல்.எஸ்.விஸ்வநாதன்.

Updated On :30 செப்டம்பர் 2020, 4:42 am

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அமைந்துள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு பேருந்து நிலையத்திலிருந்து சென்று மருத்துவம் பார்த்து திரும்பும் வகையில் இலவச பேருந்து வசதி சேவையை எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் சாலையில் கோனேரிக்குப்பத்தில் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் முதலாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு மருத்துவமனைக்கு பலரும் வந்து திரும்பும் வகையில் இலவச பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து எஸ்.பி.தெ.சண்முகப்பிரியாவும், மருத்துவமனையின் தலைவர் பம்மல். எஸ்.விஸ்வநாதனும் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

மருத்துவமனையின் தலைமை நிர்வாக அலுவலர் பி. விஜயலெட்சுமி, மருத்துவர் பெருங்கோ, விமானப்படையிலிருந்து பணி ஓய்வு பெற்ற கமாண்டர் வி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பம்மல் சங்கரா கண் மருத்துவமனையின் பொது மேலாளர் கண்ணொளி பாபு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழா குறித்து சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் பம்மல்.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், பள்ளிக் குழந்தைகளுக்காக அடிக்கடி இலவச கண் மருத்துவம் மற்றும் பல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அதேபோல கிராமப்புற ஏழைகளுக்காகவே இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. எனவே, மருத்துவச் சேவை பெற விரும்புவோருக்காக இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.