மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பாளை. அருகே இரு திருநங்கைகள் உள்பட மூவர் கொலை

பாளையங்கோட்டை அருகே 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

News image

கொலை செய்யப்பட்ட திருநங்கைகள் பவானி, அனுஷ்கா

Updated On :21 ஆகஸ்ட் 2020, 3:34 pm IST

பாளையங்கோட்டை அருகே 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்தவர் பவானி. இவரைக் கடந்த சில நாள்களாக காணவில்லை. மேலும், அவர், மகாராஜா நகர் பகுதியில் உல்ள முருகன், அனுஷ்கா ஆகியோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். இதையடுத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால், அங்கு முருகனும், அனுஷ்காவும் இல்லை. மேலும், அந்த வீட்டில் ரத்தக்கரை இருந்துள்ளது. 

கொலை செய்யப்பட்ட முருகன்

கொலை செய்யப்பட்ட முருகன்

இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், இது குறித்து சுத்தமல்லி போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். அதில், சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாக பவானி சென்றதாகவும் கூறப்பட்டது. இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரிஷிகேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களின் உடலை போட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உடனடியாக போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் கூறியது போல் எதுவும் இல்லை. 

இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது 3 பேரின் உடல்களை சாக்குமூட்டையில் கட்டி பாளையங்கோட்டை  கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கிணற்றில் போட்டதாக கூறினார்.  அதன்படி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு கிணற்றிலும் சாக்கு மூட்டைகள் மிதந்துள்ளன. 

கொலை செய்ததாகக் கூறப்படும் ரிஷிகேஷ் என்பவரை உடல்களை அடையாளம் காட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.