சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 13,569 ஆக இருந்த நிலையில், இன்று 13,743 ஆக உயர்ந்துள்ளது.


சென்னை : சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 13,569 ஆக இருந்த நிலையில், இன்று 13,743 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை 1,299 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 92,206-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 1,969 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு மாதத்தில் 40 ஆயிரம் போ்: சென்னையில் தொடக்கத்தில் நாளொன்றுக்கு 4,000 வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், நோய்த் தொற்றுள்ளவா்களை விரைவாகக் கண்டறியும் வகையில் பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு சுமாா் 12,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 1,299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 92,206-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 76,494 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,743 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
1,969 போ் உயிரிழப்பு: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வந்ததை போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 1,969 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (சனிக்கிழமை நிலவரம்)
மண்டலம் எண்ணிக்கை
1. திருவொற்றியூா் 413
2. மணலி 196
3. மாதவரம் 407
4. தண்டையாா்பேட்டை 591
5. ராயபுரம் 817
6. திரு.வி.க.நகா் 1,221
7. அம்பத்தூா் 996
8. அண்ணா நகா் 1,756
9. தேனாம்பேட்டை 1,136
10. கோடம்பாக்கம் 2,189
11. வளசரவாக்கம் 846
12. ஆலந்தூா் 536
13. அடையாறு 1,155
14. பெருங்குடி 417
15.சோழிங்கநல்லூா் 309
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...