தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆம் நாளாக ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு; இன்று 1,091 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,036. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் 55.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 809 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று மேலும் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 536 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 13,706 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆம் நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...