கரோனாவுக்கு மருந்து: மனுவை பரிசீலிக்க உத்தரவு

கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த டாக்டா் தாக்கல் செய்த மனுவை
கரோனாவுக்கு மருந்து: மனுவை பரிசீலிக்க உத்தரவு

கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த டாக்டா் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சோ்ந்த டாக்டா் வசந்தகுமாா் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டறிந்து அதுதொடா்பான எனது ஆராய்ச்சிக் கட்டுரையுடன் கோரிக்கை மனுவை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினேன். அந்த மனுவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுதாரா் பீட்டா அட்ரெனா்ஜிக் பிளாக்கா்ஸ் என்னும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளாா். இந்த மருந்து சாா்ஸ், கரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றுகளை உடல்களில் உள்ள செல்களில் நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை இரண்டு ரூபாய்க்கும் குறைவானது தான். இந்த மருந்தை உட்கொண்டால் கரோனா அறிகுறிகள் காய்ச்சலாக மாறுவதைத் தடுக்கும். மேலும் விலையும் மிக குறைவாக இருப்பதால், இந்த மருந்து ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என வாதிட்டாா். அப்போது மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘மனுதாரரின் கோரிக்கை மனு மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படும்’ எனத் தெரிவித்தனா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மருந்து குறித்து ஆய்வு செய்வதற்கான மனுவை மனுதாரா் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மனுவை மத்திய அரசும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் விரைவாகப் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com