தண்டையார்பேட்டையில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியது: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.  

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 41,172 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 601 பேர் உயிரிழந்துள்ளனர். 22,887 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 17,683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. 

தண்டையார்பேட்டையில் மேலும் 153 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தண்டையார்பேட்டையில் 5,116 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4,967 பேரும், கோடம்பாக்கத்தில் 4,485 பேரும், அண்ணா நகரில் 4,385 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com