புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு

மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் கோயிலில் தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :6 மார்ச் 2020, 9:38 am

மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் மாசி மாதத்தில் தேரோட்டத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான மாசிமக விழா பிப்ரவரி 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டமும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

இதைத் தொடர்ந்து நாளை (7-ம் தேதி) இரவு சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 8-ம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் விதி உலா, மகாமக குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.