ஈரோடு அம்மன் கோயில் திருவிழா வரும் 17ல் பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் கோயில்களில் பொங்கல் மற்றும் குண்டம் திருவிழா வரும் 17-ல் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 
ஈரோடு அம்மன் கோயில் திருவிழா வரும் 17ல் பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் கோயில்களில் பொங்கல் மற்றும் குண்டம் திருவிழா வரும் 17-ல் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களான பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறாவைச் சேர்ந்த சின்ன மாரியம்மன்(நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் ஆண்டுதோறும் பொங்கல், குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த கோயில்களில் சிறப்பு என்னவென்றால் மூன்று கோயில்களிலும் ஒரே நேரத்தில் ஒரே நாட்களில் விழா துவங்கப்படும். இதில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து வருவதால், அக்கோயிலில் நடப்பாண்டு குண்டம் விழா உட்பட எவ்வித வழிபாடும் இல்லை. 

இதனால், நடப்பாண்டுக்கான திருவிழா பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் கோயிலில் மட்டும் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா வரும் 17ம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுடன் துவங்க உள்ளது. அதைத்தொடர்ந்து இருகோயில்களிலும் 21ம் தேதி கம்பம் நடுதலும், 31ம் தேதி மாவிளக்கு, கரகம் எடுத்தலும், முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஏப்.,1ம் தேதி பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழாவும், அதைத்தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோயிலில் காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தலும், ஏப்.,2ம் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா வருதலும், ஏப்.,3ம் தேதி மாலை 4மணிக்கு தேர் கோயிலில் நிலை வந்து சேருதலும், அதையடுத்து இரவு 10 மணிக்கு சின்னமாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா வருதலும் நடக்கிறது. விழாவின் கடைசி நிகழ்வான கம்பம் எடுத்தல் விழா ஏப்.,4ம் தேதியும், அதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், ஏப்.,5ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதுகுறித்து பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மணிகண்டன் கூறும்போது..

இந்த ஆண்டு சிறு பணிகள் நடப்பதால் காரணமாகக்  காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறாது குறிப்பாகக் குண்டம் விழா கம்பம் நடும் விழா திருவிழாவும் நடைபெறாது இன்னும் நாலைந்து மாதங்களில் திருப்பணிகள் முடிவடைந்தவுடன் அடுத்த வருடம் வழக்கம்போல் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணிக்கான மூர்த்த கால் விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் எம்எல்ஏக்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றார். 

முன்னதாக, பெரிய மாரியம்மன் மஹராஜ் திருக்கோயில் குன்றத்தூர் விழாவையொட்டி பந்தல் கால்கோள் விழா இன்று காலை போடப்பட்டது. விழாவிற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தென்னரசு நகரவை கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com