கோவையில் இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்து அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.
அதே போல கோவை கணபதி பகுதியில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதற்கிடையே இந்தப் போராட்டத்துக்கு அரசு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று கோவை மக்கள் மேடை அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் விசாரணை நேற்று நடைபெற்ற போது போராட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று அரசுத் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே கடையடைப்பு செய்யும்படி வற்புறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் சனிக்கிழமை காலை தொடங்கியது.

இதில் கோவை காந்திபுரம், கணபதி டவுன்ஹால், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


