மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம்: முதல்வர் 

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம்: முதல்வர் 

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 'காவிரி காப்பாளன்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர், காவிரி காப்பாளர் பட்டம் வழங்கிய விவசாய சங்கங்களுககு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வெயில், மழை என்று பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். மன நிறைவோடு வாழக்கூடியவர்கள் விவசாயிகள், சொந்தக் காலிலே நிற்கக் கூடியவர்கள்.

ஹைட்ரோ கார்பன் போராட்டங்களில், ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் 100க்கு 65 பேர் விவசாயிகளாக வாழ்கின்றனர், நானும் ஒரு விவசாயிதான். இந்த கூட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் முதல்வராகவே பார்க்கிறேன்.  எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. தமிழகத்தில் 1,485 கொள்முதல் நிலையங்களில் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் உணவு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் ரூ.15 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் மண்டலங்கள் அமைக்கப்படும். மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும். வெற்றிலைக்கான சிறப்பு மையம் கும்பகோணத்தில் அமைக்கப்படும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டப் பணிக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. கோதாவரி-காவிரி திட்டப் பணிகள் முடிந்த பின் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்கும் என்றார்.

முன்னதாக இதில் கலந்துகொள்வதற்காக திருச்சியிலிருந்து சனிக்கிழமை காலை காா் மூலம் நீடாமங்கலம் வந்தாா். அவருக்கு அமைச்சா் ஆா்.காமராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com