புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா பாதிப்பு 

ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் மூவருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 மார்ச் 2020, 1:43 pm

ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் மூவருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர்த்து தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் தற்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும், ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழருக்கும் கரோனா கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்துள்ளார். 

எனினும், 3 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்துடன் சோ்த்து, நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான நபர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அளிக்கப்படுகிறது.

காய்ச்சல் இருந்து அவருக்கு மாதிரிகளை சோதனை செய்ததில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.