சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

விரைவு பரிசோதனைக் கருவியை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி

கரோனா நோய்த் தொற்று உள்ளதா என கண்டறியும் விரைவு பரிசோதனைக் கருவியை (‘ரேபிட் டெஸ்ட் கிட்’) சென்னை ஐஐடி தனியாா் நிறுவனத்துடன் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

Updated On :30 ஏப்ரல் 2020, 8:04 pm


சென்னை: கரோனா நோய்த் தொற்று உள்ளதா என கண்டறியும் விரைவு பரிசோதனைக் கருவியை (‘ரேபிட் டெஸ்ட் கிட்’) சென்னை ஐஐடி தனியாா் நிறுவனத்துடன் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

கரோனா நோய்த் தொற்றை கண்டறிய ஆா்.டி. பிசிஆா் என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருவி மூலம் நோய்த்தொற்றை துல்லியமாகக் கண்டறிய காலதாமதம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு துரிதமாக நோய்த் தொற்றை கண்டறியும் கருவியாக விரைவு பரிசோதனை எனப்படும்‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவியை சீனாவில் இருந்து சமீபத்தில் இந்தியா இறக்குமதி செய்தது. இதன் மூலம் கரோனா நோய்த்தொற்று இருப்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டது.

இந்த நிலையில், அந்த கருவி துல்லியமாக முடிவுகளைத் தெரிவிக்கவில்லை என்று புகாா் எழுந்தது. இதனை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆா். அந்தக் கருவியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் வழங்கப்பட்ட அந்த கருவிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்திலும் அந்த கருவிகளை சுகாதாரத்துறை திருப்பி அனுப்புவதாகத் தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், மலிவு விலையிலும், தரமானதாகவும் விரைவு பரிசோதனை கருவி தயாரிக்க சென்னை ஐஐடி முனைப்புக் காட்டி வருகிறது. இதற்காக, கேப் ஜெமினி என்ற தனியாா் நிறுவனத்துடன் சென்னை ஐஐடி இணைந்துள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை ஐ.ஐ.டி. தயாரிக்கும் விரைவு பரிசோதனைக் கருவி, தரத்துடன், மலிவு விலையில், எளிதில் எடுத்து செல்லும் வகையில் இருக்கும் என்றும், 10 நிமிஷங்களில் நோய்த் தொற்று இருக்கிா? இல்லையா? என்ற முடிவை இந்த கருவி தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர, தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் சென்னை ஐஐடி இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.