தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகத்தில் 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு; 12 வயதுக்குட்பட்டவர்கள்

தமிழகத்தில்  12 வயதுக்குட்பட்ட 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :4 மே 2020, 1:06 pm

தமிழகத்தில்  12 வயதுக்குட்பட்ட 190 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 527 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 266 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூரில் அதிகபட்சமாக இன்று ஒரேநாளில் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வயது அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்த பாதிப்பு: 3,550 பேர் (ஆண்கள்: 2,392, பெண்கள்: 1,157, திருநங்கை: 1)

12 வயதுக்குட்பட்டவர்கள்: 190 பேர் (ஆண் குழந்தைகள்: 95, பெண் குழந்தைகள்:95)

13 முதல் 60 வயத்துக்குட்பட்டவர்கள்: 3,047 பேர் (ஆண்கள்: 2,089, பெண்கள்: 957)

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 313 பேர் (ஆண்கள்:208, பெண்கள்:105) 

சென்னையில் பிறந்து 3 நாள்களே ஆன குழந்தைக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.