சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

12-ம் வகுப்பு கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு

மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடைசித் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.

கோப்புப் படம்

Published On :27 ஜனவரி 2024, 10:07 pm IST


சென்னை: மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடைசித் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 24-ந் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை 4-ம் தேதி மறு தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

அதாவது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4-ம் தேதி வேதியியல்  / கணக்குப் பதிவியல் / புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும், 12ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 36,842 மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 27-ம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படும்.

மேலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் பாடங்களுக்கு ஜூன் 2ம் தேதி தேர்வு நடைபெறும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.