சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை, நேற்றையிலிருந்து கனமழை பொழிந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகரத்தில் சுமார் 30 தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கின்றது. அந்த தண்ணீரை அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி, ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி, அந்தத் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல டெல்டா மாவட்டங்கள், அதோடு, புயலால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 13 மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது, கனமழை பொழியுமென்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.