தமிழகத்தில் புதிதாக 5,622 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,622 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 8 பேர்.
சென்னையில் மட்டும் புதிதாக 1,364 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் 65 பேர் (அரசு மருத்துவமனைகள் -41, தனியார் மருத்துவமனைகள் -24) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 5,596 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர். 46,255 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 87,311 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 76,13,999 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கோவில்பட்டியில் ஒரு தனியார் ஆய்வகத்துக்குப் புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்கள் 123, அரசு ஆய்வகங்கள் 66 என மொத்தம் 189 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


