சென்னையில் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42- ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 42 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 21 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளன. மேலும், தேனாம்பேட்டை அடையாறு, ஆலந்தூர் மண்டலங்களில் தலா 4 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அம்பத்தூரில் ஐந்துக்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களைக் கொண்ட பகுதிகளாக முகப்பேர் கிழக்கு, பாடி, திருமங்கலம், கொரட்டூர், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தற்போது சென்னையில் 674 தெருக்கள் கரோனா நோயாளிகள் வசிக்கும் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அம்பத்தூர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் தெருக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 12,560 கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதேவேளையில், கரோனா பாதித்தவர்களில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 91 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


