ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தேவை எச்சரிக்கை: சென்னையில் நோயாளிகள் எண்ணிக்கை 13,000-ஐ தாண்டியது

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,110 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News image

தேவை எச்சரிக்கை: சென்னையில் நோயாளிகள் எண்ணிக்கை 13,000-ஐ தாண்டியது

Updated On :8 அக்டோபர் 2020, 6:52 am


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,110 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகபட்சமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் தலா 1,300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவிக நகர், அடையாறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனாவுக்கு பலியானோரில் தேனாம்பேட்டையில்தான் அதிகளவாக 427 பேர் பலியாகியுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த்தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

அதேபோல், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி செய்து வருகிறது.

எனினும் தற்போது சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் வரை 10 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கரோனா பாதித்ததில் இதுவரை 1.60 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 3,336 பேர் பலியாகிவிட்டனர். 13,110 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மண்டல வாரியாக பாதிப்பு நிலவரம்..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.