ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 அக்டோபர் 2020, 12:45 pm


தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,242 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 1,272 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 67 பேர் (அரசு மருத்துவமனை -36, தனியார் மருத்துவமனை -31) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 5,222 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,97,033 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 44,150 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 91,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 82,32,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரியில் ஒரு தனியார் ஆய்வகத்துக்குப் புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 125 என மொத்தம் 191 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.