ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :12 அக்டோபர் 2020, 12:50 pm


தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 4,879 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,61,264 ஆக உயர்ந்துள்ளது.

42 நாள்களுக்குப் பிறகு 5 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 62 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 5,165 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.