முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆவின் வழங்கும் பண்டிகைக் கால சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

News image
ஆவின் வழங்கும் பண்டிகைக் கால சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை
Updated On :23 அக்டோபர் 2020, 10:06 am

DIN


சென்னை: பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையிலான அரசு, பால் வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

மேலும் வெண்ணெய் , நெய், பால்கோவா, ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் உப பொருட்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு கீழ்கண்ட 5 வகையான சிறப்பு இனிப்புகளை 23.10.2020 முதல் விற்பனையை துவங்கியுள்ளது.

1) ஸ்டஃப்டு டிரை ஜாமுன் (250 கி) - ரூ.190.00
2) நட்டி மில்க் கேக் (250 கி) - ரூ.190.00
3) ஸ்டஃப்டு மோதி பாக் (250 கி) - ரூ.170.00
4) காஜு பிஸ்தா ரோல் (250 கி) - ரூ.225.00
5) ஃபிளேவர்டு மில்க் பர்ஃபி (250 கி) - ரூ.165.00
6) மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய பெட்டகம் (500 கி) - ரூ.375.00 ஆகும்.

இவை அனைத்தும் முதன் முறையாக உயர்தர சமையல் வல்லுனர் அஞ்சரை பெட்டி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற  விஜய் டேனி மற்றும் அவருடைய குழுவினர்களை கொண்டு தமிழக அரசின் கோவிட் - 19 வழிகாட்டுதலின் படி சுகாதாரமான முறையில் தரமான ஆவின் நெய் பயன்படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் 5 வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு இன்று (அக்.23) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.