தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,569 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,569 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் புதிதாக 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 66 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,751 ஆக உயர்ந்துள்ளது. 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,81,273 பேர் குணமடைந்துள்ளனர். 46,453 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 85,117 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 63,88,583 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 66, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 109 என மொத்தம் 175 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


