தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,516 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் புதிதாக 996 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 60 பேர் பலியானதாக இன்றைய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,811 ஆக உயர்ந்துள்ளது.
5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,86,479 பேர் குணமடைந்துள்ளனர். 46,703 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 86,073 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 64,74,656 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நிர்வாகப் பிரச்னை காரணமாக திண்டிவனத்திலுள்ள தனியார் பரிசோதனை ஆய்வகத்தின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 108 என மொத்தம் 174 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


