சென்னை: பொதுமுடக்கத்துக்குப் பின் இயங்கத் தொடங்கிய சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 31.52 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 12.30 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரேர் ரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை 31,52,446 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 83,813 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டில் ஒருவழிப் பயண அட்டை, இரு வழிப் பயண அட்டை, பல வழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 20% தள்ளுபடி அளித்து வருகிறது.
பயண அட்டைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 10 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றும், பயணிகளின் வசதிக்காக அனைத்து நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை: குடியரசுத் துணைத்தலைவர்

அறிமுகப் போட்டியில் பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 155 ரன்கள் இலக்கு!

ஹிந்து கடவுள்களின் தந்தை இயேசு என பரவிய ஏஐ விடியோக்கள்: சத்தீஸ்கரில் போராட்டம்!







