தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு: ஊராட்சி செயலர்கள் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

வாழப்பாடியில் நடைபெற்ற தமிழ்நாடு  ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டம்.

Updated On :2 ஜனவரி 2021, 3:15 pm IST

கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒன்றிய தலைவர் அண்ணாதுரை வரவேற்றார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.முருகன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் கே. மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க கோரிக்கையை ஏற்று,  2020 டிசம்பர் 5ஆம் தேதி, ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழப்பாடி ஒன்றியத்திற்ககு தலைவராக அண்ணாதுரை, செயலாளராக அலெக்ஸ் பிரபாகரன், பொருளாளராக குமரேசன், துணைத் தலைவராக பூச்சான்,  துணை செயலாளராக கோவிந்தராஜ், செய்தித் தொடர்பாளராக பெருமாள், துணைசெயலாளராக செந்தில்குமார்,  செயற்குழு உறுப்பினர்களாக சரவணன், கஸ்தூரி, மகளிரணி தலைவியாக உமா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிறைவாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.