தமிழகத்தில் தொடா்ந்து நான்காவது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 921 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 1.42 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8 லட்சத்து 18,935 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 252 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,029 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97.5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 98,420-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 8,380 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 13 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,135-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள்

நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள எப்போதிலிருந்து தயாராக வேண்டும்?
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி பலி: குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்; பிரேமலதா







