அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செங்கனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஊர் பொதுமக்கள் கருப்புக் கொடி கட்டி அம்மன் கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்டது செங்கானூர் கிராமம். இங்கு சுமார் 300 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இதுவரை அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் ஓடை, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. மேலும் இந்த கிராமத்திற்கு ஆழ்வார்குறிச்சியில் இருந்து வரும் வழியில் ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அடிப்படை வசதிகள் கோரியும், மாற்றுப்பாதை அமைத்துக்தரக் கோரியும் கிராம மக்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை ஆளுநரிடம் ஜன.5இல் ஒப்படைப்பதாக அறிவித்தனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததை எடுத்து இன்று செங்கனூர் கிராமத்திலுள்ள முப்புடாதியம்மன் கோவிலில் கிராம மக்கள் அனைவரும் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன், ஆழ்வார்குறிச்சி வருவாய் ஆய்வாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த பிரிட்டன்!

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவா் கைது

தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



