பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

எடப்பாடியில் வீடு தீப்பிடித்ததில் நகை, பணம் எரிந்து நாசம்

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரி பகுதியில், செவ்வாயன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. 

News image

 எடப்பாடி அருகே தீ விபத்தில் சேதமடைந்த வீடு

Updated On :6 ஜனவரி 2021, 5:53 pm IST

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரி பகுதியில், செவ்வாயன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. 

பழைய எடப்பாடியை அடுத்த பெரிய ஏரிப்பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (50), இவரது மனைவி கமலா(45), கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய் அன்று இரவு, ராம்குமார் மற்றும் அவரது மகன்கள் வெளியே சென்றிருந்த நிலையில், கமலா வீட்டி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

சமையில் கூடத்தில் ஏற்பட்ட தீ வீட்டின் கூரையினை பற்றிய நிலையில், தீ பற்றிய வீட்டிலிருந்து கமலா தப்பி வெளியேறியுள்ளார். அருகில் குடியிருப்புகள் அதிகம் இல்லாததால், உரிய நேரத்தில் உதவிக்கிடைக்காத நிலையில், கூரையில் பற்றிய தீ மேலும் பரவி வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. 

மேலும் வீட்டின் சமையல் அறையிலிருந்த எரிவாயு உருளைகள் வெடித்ததில், தீயின் தாக்கம் அதிகரித்து, வீட்டிலிருந்த ரொக்கப்பணம், தங்கநகை மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின, மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டியும் தீயில் எரிந்து சேதமடைந்தது. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் நிகழ்விடம் வருவதற்குள், வீடு முழுவதும் எரிந்துபோனது. தீ விபத்துகுறித்து, தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.