திருவாரூர்: கூத்தாநல்லூர் வட்டத்தில் 55 வருவாய் கிராமங்களிலும், 19,571 ஏக்கர் நெல் பயிர் சேதம் அடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் பெய்த வடக்கிழக்கு பருவ மழையால், பெரும் பகுதியான விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு தீர்மானித்தது. அதன்படி, கூத்தாநல்லூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவின்படி, வடபாதிமங்கலம், கமலாபுரம் மற்றும் கூத்தாநல்லூர் உள்ளிட்ட 3 பிர்க்காவிலும் உள்ள 55 கிராமங்களிலும், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, வட்டாட்சியர் அலுவலக அலுவலர் கூறியது, கூத்தாநல்லூர் வட்டத்தில், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட 17 கிராமங்களில், பயிர் செய்யப்பட்ட 7,898 ஏக்கர் நிலத்தில், 5,159 ஏக்கர் பயிர் சேதம் அடைந்துள்ளது.
மன்னார்குடி, கோட்டூர் வேளாண் வட்டாரத்திற்குட்பட்ட 23 கிராமங்களில், பயிர் செய்யப்பட்ட 13,169 ஏக்கரில், 9,650 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
மேலும், கொரடாச்சேரி வேளாண் வட்டாரத்திற்குட்பட்ட 15 கிராமங்களில், பயிர் செய்யப்பட்ட 7,687 ஏக்கரில், 4,762 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
கூத்தாநல்லூர் வட்டத்தில், பயிர் செய்யப்பட்ட 28,754 ஏக்கரில், 19,571 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை கோட்டத்தில் 143 கி.மீ. தண்டவாளங்கள் சீரமைப்பு பணி

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்
கோவில்பட்டியில் இன்று மின்தடை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

