விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியானதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் வாகைகுளம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (36) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாலசுப்ரமணியம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை ஓட்டிசென்ற போது ராஜபாளையத்திலிருந்து போடிக்கு சென்ற அரசு பேருந்து முன்பு சென்ற ஆட்டோ மீது மோதியதில் பாலசுப்பிரமணியத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டு செல்லும் வழியில் திருமங்கலத்தில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







