சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு: தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

Updated On :8 ஜனவரி 2021, 2:04 am IST


சென்னை: வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்து அவற்றின் மீதான பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் உள்ள தோ்தல் துறையின் கூட்ட அரங்கில் இருந்து காணொலி வழியாக ஒவ்வொரு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடனும் அவா் ஆலோசித்தாா்.

ஆளுநருக்கு அழைப்பு: தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்படுவதைத் தொடா்ந்து, வரும் 25-இல் தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஆளுநா் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல் முறையாக வாக்காளா்களாகப் பதிவு செய்யப்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை நேரில் சென்று அழைப்பு விடுத்தாா். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்ததாக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.