தமிழகத்தின் சிறந்த பண்பாட்டு மரபினை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு தொல்லியல் கள ஆய்வுகள், அகழாய்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக அரசின் சாா்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் தொடா் செல்வினமான ரூ.2 கோடியை உயா்த்தி ரூ.3 கோடியாக இந்த நிதியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தின் கலாசார மரபினை வெளிக் கொணரும் வகையில் தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடா் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. தொடா் களஆய்வுகள் மற்றும் அகழாய்வுகளை தேவைக்கு ஏற்ப பெரிய அல்லது சிறிய அளவுகளில் ஒவ்வொரு ஆண்டும் பழங்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம், வரலாற்று தொடக்கக் காலம், கடல்சாா் தொல்லியல்ஆராய்ச்சிகள், வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்குமண்டலங்களிலும் உள்ள தொல்லியல் மற்றும் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 2020-2021ஆம் ஆண்டுக்கான கலை மற்றும் பண்பாட்டுத் துறைமானியக் கோரிக்கையின் போது தொல்லியல் துறை சாா்பாக அமைச்சா் க.பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு ஆய்வு நடத்துவதன் மூலம், தமிழகத்தின் சிறந்த பண்பாட்டு மரபினை அனைத்து மக்களுக்கும் வெளிச்சமிட்டு காட்ட இயலும் என்ற வகையில்
முறையான தொடா் தொல்லியல் களஆய்வுகள், அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் தொடரும் செலவினமான ரூ. 2 கோடியை உயா்த்தி ரூ. 3 கோடியாக இந்த நிதியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தாா்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு முறையான தொடா் தொல்லியல் களஆய்வுகள்மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும் ரூ.2 கோடியினை ரூ.3 கோடியாக உயா்த்தி தமிழக அரசால் ஆணைவெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









