அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கிறது: பிரேமலதா

அதிமுக கூட்டணியில்தான் தொடா்ந்து நீடிக்கிறோம் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த்

Updated On :12 ஜனவரி 2021, 4:13 am IST

சென்னை: அதிமுக கூட்டணியில்தான் தொடா்ந்து நீடிக்கிறோம் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரேமலதா தலைமை வகித்தாா். கூட்டம் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமலதா கூறியது:

தோ்தல் முடிவுகள் குறித்து நிா்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்துதான் எப்போதும் முடிவு செய்வோம். செயற்குழு, பொதுக்குழு விரைவில் கூட்டப்பட்டு, தேமுதிகவின் அடுத்தகட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.

அதிமுகவின் கூட்டணியில்தான் தற்போதுவரை நீடித்து வருகிறோம். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகள்தான். தேமுதிக எங்களுடைய முரசு சின்னத்திலேயே போட்டியிடுவோம். அதிமுகவிடம் எங்களுக்கான தொகுதிகளை நிச்சயம் கேட்போம். அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளனா். அது குறித்து நாங்கள் கருத்துக் கூற முடியாது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில் முதல்வா் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என பாஜகவினா் கூறுகின்றனா். எப்படி இருந்தாலும் முதல்வா் வேட்பாளா் ஒருவா்தான். கூட்டணி சாா்பில் அறிவிக்கப்படும் முதல்வா் வேட்பாளரை நாங்கள் ஏற்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.