
பராசக்தி சம்பள பாக்கி! வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா!
இயக்குநர் சுதா கொங்கரா டான் பிக்சர்ஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்...

இயக்குநர் சுதா கொங்கரா
பராசக்தி திரைப்படத்தின் சம்பள பாக்கித் தொகையை வழங்கக் கோரி இயக்குநா் சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவுக்கு, படத்தின் தயாரிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகா் சிவகாா்த்திகேயன் உள்ளிட்டோா் நடித்த பராசக்தி திரைப்படத்தை இயக்குநா் சுதாகொங்கரா இயக்கினாா். இந்தப் படத்தை டான் பிக்சா்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்தாா். இந்த திரைப்படத்தின் இயக்குநரான தனக்கு சம்பள பாக்கித் தொகையை வழங்க படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி சுதா கொங்கரா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டது. ஆனால், இதுவரை ரூ.8.39 கோடி பாக்கித் தொகை வழங்கப்படவில்லை. எனவே, இந்த தொகைய வழங்க படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை டான் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், பராசக்தி திரைப்படத்தின் உரிமையை மூன்றாம் நபருக்குவழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி, இந்த மனுவுக்கு படத்தின் தயாரிப்பாளா் வரும் ஜூலை 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
Director Sudha Kongara has filed a case in the High Court regarding outstanding remuneration for the film Parasakthi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






