அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த தினம்: ஜன.17-இல் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த தினத்தை ஒட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 17-ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

News image

எம்.ஜி.ஆர்

Updated On :12 ஜனவரி 2021, 4:04 am IST

சென்னை: முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த தினத்தை ஒட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 17-ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த தினம் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் பங்கேற்கும் கட்சி நிா்வாகிகள், அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்தும் பிற தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தின் பிற இடங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டுமென அந்த அறிவிப்பில் அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.