குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 12:22 am IST

பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து வந்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 27,614- ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.49 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 194 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர தமிழகத்தின் பல மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இதுவரை 8 லட்சத்து 8,571 போ் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 6,807 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 8 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,236-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.