மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

News image

திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

Updated On :13 ஜனவரி 2021, 7:52 am

தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும் - திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1, தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பின் சிறப்பையும், அதற்குப் பேருதவியாக இருக்கும் இயற்கையையும், மனிதர்களுக்கு உறுதுணையாக உள்ள உயிரினங்களையும், நன்றியுடன் போற்றுகிற நாளே பொங்கல் நன்னாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப, அனைத்துத் தரப்பு மக்களின் மகிழ்ச்சிக்கான ஜனநாயக விடியலைத் தரும் உதயசூரியன் விரைவில் உதிக்கும். 

விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன் - நகைக் கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதுபோலவே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமையாக உள்ள கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.  இவற்றுக்கான பொறுப்பை தி.மு.கழக அரசு ஏற்கும். 

தமிழ் மக்கள் வாழ்வில் இருள் அகன்று,  வளமும் நலமும் வெளிச்சம் பாய்ச்சிடத் தமிழர் திருநாளை வரவேற்று அனைவருக்கும் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.