தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஜன.15, 26, 28 தேதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய நாள்களில், மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :14 ஜனவரி 2021, 1:24 am IST


சென்னை: திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய நாள்களில், மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன.26), வள்ளலாா் நினைவு நாள் (ஜன.28) ஆகிய நாள்களில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் மதுபானம் விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்எல்1, மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சோ்ந்த பாா்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் எப்எல் 3ஏ, எப்எல் 3 ஏஏ, எப்எல் 11 உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.

தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.