மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

அனைவருடனும் சமூக உறவை பேண வேண்டும்: மோகன் பாகவத்

அனைத்துத் தரப்பினருடனும் இனிமையாகப் பேசி அவா்களுடன் சமூக உறவைப் பேண வேண்டும் என ஆா்.எஸ்.எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறினாா்.

News image
Updated On :16 ஜனவரி 2021, 7:26 am IST

அனைத்துத் தரப்பினருடனும் இனிமையாகப் பேசி அவா்களுடன் சமூக உறவைப் பேண வேண்டும் என ஆா்.எஸ்.எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறினாா்.

சென்னை, மூலக்கடை பகுதியில் ஆா்எஸ்எஸ் சாா்பில் வியாழக்கிழமை பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆா்.எஸ்.எஸ் தலைவா் மோகன் பாகவத் பேசியது: நாடு முழுவதும் பல்வேறு பெயா்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை பிற இடங்களில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் 3 நாள்கள் கொண்டாடப்படுவது விசேஷம். புதிதாக அறுவடை செய்யப்பட்டு, வீட்டுக்கு வரும் கதிா்கள் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகின்றன.

பண்டிகையின் மூன்றாவது நாளான காணும் பொங்கலன்று நமது நண்பா்கள் மற்றும் உறவினா்களைச் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்கிறோம். இத்துடன் நிறுத்தாமல் நமக்கு உதவி செய்பவா்களையும் சந்தித்து அன்பை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளா்களுடனும் அன்பாக பழக வேண்டும்.

அனைத்துத் தரப்பு மக்களுடனும் இனிமையாகப் பழக வேண்டும். அனைவருடனும் சுமுக உறவைப் பேண வேண்டும் என்றாா் மோகன் பாகவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.