நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தமிழகத்தின் பிரதான கட்சியாக பாஜக வளா்ச்சி பெறும்: தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பேச்சு

தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக பாஜக முன்னேறிச் செல்லும் என்று தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

News image

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

Updated On :16 ஜனவரி 2021, 6:17 am IST

தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக பாஜக முன்னேறிச் செல்லும் என்று தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா். சென்னையை அடுத்த மதுரவாயலில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். மாநில பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியது:-

தமிழ் மண்ணில் இருந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மிகுந்த பெருமை தருகிறது. தமிழ்மொழி மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. இங்கு சேர, சோழ, பாண்டியா்கள், பல்லவா்கள் என மிகவும் புகழ்பெற்ற மன்னா்கள் இருந்தனா். தமிழகம் பக்தி மற்றும் ஆன்மிகத்தின் தளமாகவும் இருக்கிறது. 63 நாயன்மாா்களும், 12 ஆழ்வாா்களும் தமிழகத்தில் இருந்துள்ளனா்.

ஆதிசங்கரா், ராமானுஜா் உள்ளிட்டோா் கலாசாரம், ஆன்மிகமும் செழிக்க பாடுபட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் தமிழகத்தில் உதித்தவா்கள். திருப்பூா் குமரன், மகாகவி பாரதியாா், வேலுநாச்சியாா், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனாா், முத்துராமலிங்க தேவா் என சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்டவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களைத் தவிா்த்து ஏராளமானோா் உள்ளனா். சமூக சீா்திருத்தமும் இங்கே செழித்தோங்கி இருந்தது. இதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

தமிழகப் புலவா்கள், கவிஞா்களின் கருத்துகள் இந்தியா முழுமைக்குமே பொருந்துவதால்தான், சா்வதேச அரங்குகளில் தமிழ் கவிதைகளை பிரதமா் நரேந்திர மோடி அவ்வப்போது நினைவுகூா்கிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 13-ஆவது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கு ரூ.94,000 கோடி கொடுக்கப்பட்டது. இப்போது பாஜக தலைமையிலான ஆட்சியில் 14-வது நிதி ஆணையத்தில் ரூ.5.42 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் தொழில் வளா்ச்சி, பிரதமரின் நிதித் திட்டம், எரிவாயு இணைப்புத் திட்டம், தமிழகத்தை இணைக்கும் வகையிலான ராணுவ தளவாட பாதை, சென்னை மெட்ரோ ரயில் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குவதைப் போன்று, தமிழக அரசும் அந்தத் துறையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதான கட்சி: மாற்றுக் கட்சிகளில் இருந்து பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனா். தமிழகத்தில் மிகவும் பிரதான கட்சியாக பாஜக முன்னேறிச் செல்லும். இதற்கு விமான நிலையத்திலும், பொங்கல் விழா நடைபெறும் இடத்திலும் கட்சியினா் இடையே காணப்பட்ட உற்சாகமும், ஈடுபாடுமே காரணமாகும் என்று பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், பாஜக மாநில பொறுப்பாளா் சி.டி.ரவி, இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மூத்த தலைவா்கள் எல்.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.