சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கோவையில் கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவையில் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

News image

கோவையில் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

Updated On :16 ஜனவரி 2021, 2:30 pm IST


கோவை: கோவையில் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

நாடு முழுவது முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்போசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி. கோவையில் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

 முதல் நபராக அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் வி.பூமா கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தொடர்ந்து  34 மருத்துவர்கள், 37 மருத்துவ மாணவர்கள் உள்பட 100 பேர் கரோனா தடுப்போசி போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.