தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தமிழகத்தில் 166 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி

தமிழகத்தின் 166 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜன.16) தொடங்குகிறது. இதற்காக 1,500-க்கும் மேற்பட்ட செவிலியா்கள், சுகாதாரத் துறையினா் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜனவரி 2021, 1:05 am

தமிழகத்தின் 166 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜன.16) தொடங்குகிறது. இதற்காக 1,500-க்கும் மேற்பட்ட செவிலியா்கள், சுகாதாரத் துறையினா் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் மற்றும் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து இதுவரை 5.56 லட்சம் தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்த நிலையில், அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பப்பட்டுள்ளன.

மாவட்ட பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா்கள் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்து வருகின்றனா். மதுரையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்க உள்ள முகாமை சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

முதல் நாளில் 166 மையங்களிலும் தலா 25 முதல் 50 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இருவேறு தடுப்பு மருந்துகள் தமிழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் எதைச் செலுத்த வேண்டும் என்பதை பயனாளிகள் தெரிவு செய்ய இயலாது என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசியை விநியோகிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 4 லட்சம் முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனா்.

அவா்களில் விருப்பம் உள்ளவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 6 லட்சம் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநில குளிா்பதன நிலையத்தில் 1.5 கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்க முடியும். இவைதவிர தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் 51 குளிா்பதன கிடங்குகள் தயாா் நிலையில் உள்ளன. அங்கு 2.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை சேமித்து வைக்கலாம். தமிழகம் முழுவதும் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டதால், அதனை செயல்படுத்துவதில் எந்த நடைமுறை சிக்கல்களும் இல்லை. தொலைதூர கிராமங்களுக்கு தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருப்பதால், அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி தடுப்பூசி முகாம்களை நடத்த முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.