வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள்

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

News image

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On :17 ஜனவரி 2021, 3:53 pm IST

சென்னை: பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஜனவரி 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 2,56,000 க்கும் மேற்பட்டோர் குரூப் 1 தோ்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தனா்.

தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வினாத்தாளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், எனவே தேர்வர்களுக்கு இழப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது; தவறுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.